திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பெயிண்டர் மீது வழக்கு
சேலத்தில் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பெயிண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் முருகேசன் (வயது 25). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலாக மாறியது.
பின்னர் முருகேசன், அந்த இளம்பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பச்சப்பட்டியில் உள்ள ஒரு சுகாதார வளாகம் பின்புறம் முருகேசன் அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றார். அங்கு அவர் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பம் அடைந்ததை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் முருகேசனிடம் தெரிவித்தார். அதற்கு முருகேசன், அந்த கர்ப்பத்திற்கு தான் காரணம் கிடையாது எனவும், உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் கூறி விட்டார். இதைக்கேட்டு அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதை வெளியே சொல்ல முடியாமலும், குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமலும் அவர் தவித்து வந்தார். இதனிடையே அந்த பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தது அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரியவந்தது. ஏன் இவ்வாறு இருக்கிறது என அந்த பெண்ணிடம் குடும்பத்தினர் கேட்ட போது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
தொடர்ந்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் முருகேசனை சந்தித்து தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். அதற்கு அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததாக தெரிகிறது. மேலும் அந்த இளம்பெண் தற்போது 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் முருகேசன் மீது இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவான முருகேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story