தேனியில் பரபரப்பு சம்பவம், நடுரோட்டில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்


தேனியில் பரபரப்பு சம்பவம், நடுரோட்டில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடுரோட்டில் நின்று கொண்டு வாலிபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி (வயது 32). இவர் தேனியில் ஒரு தனியார் மினிபஸ்சில் சில ஆண்டுகாலம் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். பின்னர், வேலையின்றி வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் கம்பம் சாலையில் நேற்று பகல் 1 மணியளவில் அவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருந்தது. திடீரென அவர் ஒரு கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தம் வெளியேறியது. இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கும், தேனி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும் 108 ஆம்புலன்சும் அங்கு வந்தது. அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பும் தனக்கு தானே கையில் கத்தியால் அறுத்துக்கொண்டது தெரியவந்தது. அவர் மனதளவில் ஏற்பட்ட ஏதோ பாதிப்புகளால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story