நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 1 March 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 11:31 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி நெசவாளர் நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பி.குருநாதன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி வரவேற்றார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகராட்சி முன்னாள் தலைவர் சுமதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் மோகன், விஜயன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன், திரைப்பட இயக்குனர் பவித்ரன், மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இதுபோன்ற சாதனை திட்டங்களுக்கு பொதுமக்கள் நல்லாதரவு தர வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த கூட்டணியின் வெற்றிக்கு கட்சி தொண்டர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும், என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம், முன்னாள் ஒன்றிய செயலாளர் டாலி ரவிச்சந்திரன், முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், நகர துணை செயலாளர் அறிவாளி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகம், நகர நிர்வாகிகள் சுந்தரம், வடிவேல், மதியழகன், மாதேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில் நன்றி கூறினார்.

Next Story