ஓசூர், கல்லாவியில் பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி


ஓசூர், கல்லாவியில் பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர், கல்லாவியில் பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலைந்துரையாடினார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலும், ஓசூர்-பாகலூர் சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஒரு கூட்டரங்கிலும் பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் பாலகணபதி, கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜூ, மாவட்ட செயலாளர் ராஜி, மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஆர்.விஜய குமார், நகர செயலாளர் ராகவேந்திரா, நகர பொது செயலாளர்கள் கிரிஷ்குமார், தங்கராஜ், சந்துரு மற்றும் கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதே போல ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியிலும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை பா.ஜனதா ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார அணி துணைத்தலைவர் ஜெயராமன், ஒன்றிய பொது செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து நேரடியாக காணொலி காட்சி மூலம் பேசினார்.

இதில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் முருகம்மாள் சங்கர், ஒன்றிய பொருளாளர் ஜனார்த்தனம், நிர்வாகிகள் நாகராஜ், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலன், மத்தூர் ஒன்றிய பொது செயலாளர் செல்வம், ஒன்றிய மகளிர் அணி சரிதா, சிவனேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story