பாளையங்கோட்டையில் ஆக்கி லீக் போட்டியில் தூத்துக்குடி அணி முதலிடம்
பாளையங்கோட்டையில் நடந்த ஆக்கி லீக் போட்டியில் தூத்துக்குடி அணி முதலிடத்தை பிடித்தது.
நெல்லை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் 2018-19-ம் ஆண்டுக்கான மண்டல ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை லீக் போட்டிகள் பாளையங்கோட்டை விளையாட்டு அரங்கில் உள்ள செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று முன்தினம் மாலை இறுதிப்போட்டி நடைபெற்றன. இதில் தூத்துக்குடி மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. நெல்லை மாவட்ட அணி 2-வது இடத்தையும், விருதுநகர் மாவட்ட அணி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் ஆகியவற்றை நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா அன்புச்செல்வன் வழங்கினார். மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜா, பன்னீர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story