பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு: வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் காலனி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி பாப்பா (வயது 50). இவர் கடந்த 13-10-2012 அன்று காலை 10 மணிக்கு நயினாரகரத்தில் இருந்து காசிதர்மம் செல்லும் ரோட்டில் இடைகால் கருப்பாநதி ஆற்றங்கரையில் உள்ள வயலில் பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவராமபேட்டை தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பபிள்ளை மகன் கைலாச சுந்தரம் (27) என்பவர் வந்தார். அப்போது, தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாப்பாவின் கழுத்தில் கிடந்த சுமார் 13 கிராம் தங்க நகையை பறித்துச் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைலாசசுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை உதவி அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், கைலாசசுந்தரத்திற்கு 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.
Related Tags :
Next Story