வீட்டுவரி செலுத்த சிறப்பு முகாம் புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு


வீட்டுவரி செலுத்த சிறப்பு முகாம் புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு
x

வீட்டுவரி செலுத்த சிறப்பு முகாமினை புதுவை நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 42 வார்டுகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு 2018-19 வரையிலான வரி பாக்கியை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி நகராட்சியின் நடவடிக்கை மற்றும் வட்டி, அபராத வட்டியை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன்கருதி புதுவை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வீட்டுவரி, சொத்துவரி வசூல் மையங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை உள்ள விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டு, சொத்து வரியினை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

நாளை சனிக்கிழமை முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதி வீட்டுவரி வசூல் மையம், கம்பன் கலையரங்க வீட்டுவரி வசூல் மையம், நெல்லித்தோப்பு வீட்டுவரி வசூல் மையம், முதலியார்பேட்டை மேரி வீட்டுவரி வசூல் மையம் ஆகிய மையங்களிலும், வாழைக்குளம் உதவிபொறியாளர் அலுவலகத்திலும் சிறப்பு வரி வசூல் மையம் செயல்படும்.

3-ந்தேதி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் சிறப்பு வரி வசூல் செய்யும் மையம் செயல்படும். மேலும் நடைமுறையில் உள்ள பொதுவரி விதிப்பின்படி நடப்பு மற்றும் நிலுவை வரி செலுத்துவதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி பாக்கிதாரர்கள் புதுச்சேரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனே செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்கள் வரி செலுத்த வரும்போது தங்களிடம் உள்ள பழைய வீட்டுவரி ரசீது, வீட்டுவரி கேட்பு அறிக்கையினை கட்டாயமாக கொண்டுவரவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story