இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 March 2019 4:00 AM IST (Updated: 1 March 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி, 

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும் நெல்லை- தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தூத்துக்குடியில் உள்ள சண்முகநாதன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மகளிர் அணி செரினா பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story