மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது: 21,318 மாணவ, மாணவிகள் எழுதினார்கள் கலெக்டர் பிரபாகர் ஆய்வு


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது: 21,318 மாணவ, மாணவிகள் எழுதினார்கள் கலெக்டர் பிரபாகர் ஆய்வு
x
தினத்தந்தி 2 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை 21 ஆயிரத்து 318 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதனை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி, 

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் மத்தூர் என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 284 மாணவர்களும், 11 ஆயிரத்து 34 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 318 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story