கிருஷ்ணகிரி, ஓசூர் போக்குவரத்து கழக பணிமனைகளில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி, ஓசூர் போக்குவரத்து கழக பணிமனைகளில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழக முதன்மை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார்.
இதையொட்டி அவர் கிருஷ்ணகிரி நகர மற்றும் புறநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் ஓசூர் பணிமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களில் இருக்கைகள், பஸ்களின் அமைப்பை ஆய்வு செய்த அவர், எந்த பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களிடம், குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பஸ்களில் ஏறும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், பஸ்களை டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி மண்டல பொது மேலாளர் லாரன்ஸ், துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், மோகன்குமார், கோட்ட மேலாளர்கள் அரவிந்த், சுரேஷ், கிருஷ்ணகிரி கிளை மேலாளர்கள் இளங்கோ, ஹர்சாபேபி, ஓசூர் கிளை மேலாளர்கள் முருகவேல், மணிவண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story