கடலூர் முதுநகர் அருகே, ரெயிலில் அடிபட்டு விவசாயி சாவு


கடலூர் முதுநகர் அருகே, ரெயிலில் அடிபட்டு விவசாயி சாவு
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே ரெயிலில் அடிபட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவெளி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பத்மநாபன் (வயது 39), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கண்ணாரப்பேட்டை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பத்மநாபன் பிணமாக கிடந்தார். இது குறித்து அறிந்து வந்த அவரது உறவினர்கள் பத்மநாபனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு, அந்த வழியாக திருச்சியில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு பத்மநாபன் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். ரெயிலில் அடிபட்டு இறந்த பத்மநாபனுக்கு கல்பனா என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும், சுதர்சன் என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story