பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8,151 மாணவர்கள் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8,151 மாணவர்கள் எழுதினர்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 33 மையங் களில் தமிழ் பாட தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவர்கள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர்.
பின்னர் 9.30 மணி யளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங் களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் 9.45 மணி யளவில் தேர்வறைக்கு மாணவர்கள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை மாணவர்கள் நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 4,229 மாணவர்களும், 4,304 மாணவிகளும் என 8,533 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வில் 8,151 பேர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்ட தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண் காணிப்பாளர்களாக 33 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 33 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூடுதல் துறை அலுவலராக 6 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலு வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 425 ஆசிரியர்கள் நியமிக் கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்- வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண் காணிக்க 60 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண் காணிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம்
இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடைந்தது. செவித்திறன்குறைபாடு, பார்வைகுறைபாடு உள்ளிட்ட தேர்வு எழுத முடியாத சூழலிலிருந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத தனியாக ஆசிரிய- ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு தேர்வு எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 தேர்வு வருகிற 19-ந் தேதியுடன் முடிவடைகிறது.
காப்பி அடிக்கவில்லை
மாணவ- மாணவிகள் தேர்வு அறைக்கு உள்ளே நுழையும் முன்பு ஆசிரிய- ஆசிரியைகளால் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடந்து கொண்டிருந்த போது இடையிடையே பறக்கும் படை உறுப்பினர்கள் மாணவ- மாணவிகள் காப்பி அடிப்பதற்காக துண்டு சீட் ஏதும் வைத்திருக்கிறார்களா? என்பதை சோதனையிட்டு கண்காணித்தனர். ஆனால் தமிழ் தேர்வு என்பதால் எவ்வித ஒழுங்கீன செயலிலும் ஈடுபட்டதாகவோ, காப்பி அடித்ததாகவோ யாரும் பிடிபடவில்லை.
ஆசிரியர்கள் வாழ்த்து
பிளஸ்-2 தேர்வு எழுத சென்ற மாணவர்களின், பெற்றோர் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளி வரை கொண்டு வந்து விட்டதோடு மட்டுமின்றி, அவர்களை தேர்வறைக்கு வழியனுப்பி வைத்து விட்டு சென்றனர். முன்னதாக சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பேனா உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து கூறியும், நெற்றியில் திருநீறு பூசி தேர்வு மையத்தில் விட்டு விட்டு சென்றதையும் காண முடிந்தது. இதேபோல் மாணவர்கள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் கைகுலுக்கியதையும், ஆசிர்வாதம் வழங்கியும் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை அவசர, அவசரமாக புத்தகத்தை புரட்டி பார்த்தனர். மாணவிகளில் சிலர் தேர்வினை பற்றிய எவ்வித பயமின்றி உற்சாகமாய் தேர்வெழுத சென்றனர்.
தமிழ் பாட தேர்வு எளிதாக இருந்தது
விடைத்தாளை அறைக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர். மாணவி பவானி கூறுகையில், தமிழ்பாட தேர்வு எளிதாக இருந்தது. பாடப்புத்தகத்திலேயே இருந்து தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் நன்றாக எழுதியுள்ளேன். இதனால் அதிக மதிப்பெண்களை பெறுவேன் என்றார். மாணவர் நவீன் கூறுகையில், தேர்வு எழுத நேரம் சரியாக இருந்தது. தமிழ் பாட தேர்வு வினாக்கள் அனைத்தும் படித்த பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததால் எளிதாக இருந்தது என்றார். தமிழ்பாட தேர்வு என்பதால் பெரும்பாலான மாணவர்கள் திருப்திகரமாக எழுதிய மகிழ்ச்சியுடனேயே வெளியே வந்ததை பார்க்க முடிந்தது.
கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மற்றும் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், துணை இயக்குனர் (மாநில கல்வி வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) டாக்டர் கருப்பசாமி ஆகியோரும் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்- வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா?, தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
382 பேர் வரவில்லை
கடந்த ஆண்டு வரை பிளஸ்-2-க்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு முதல் தாள், 2-ம் தாள் என தேர்வு நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டதால் முதல் தாள், 2-ம் தாள் இல்லாமல் ஒரே தேர்வாக நடைபெற்றது. அதன்படி நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 71 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 8,533 மாணவ- மாணவிகள் தமிழ் பாட தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 231 மாணவர்களும், 151 மாணவிகளும் என மொத்தம் 382 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் பாட தேர் வெழுத தகுதி பெற்றிருந்த 12 தனித்தேர்வர்களில் 3 பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக 4 மையங்கள்
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வுக்கு 29 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கூடுதல் 4 இடங்களாக பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஒரு மையமும், பேரளி, ஒகளூர், வாலிகண்டபுரம் ஆகிய 3 பகுதிகளில் தலா ஒரு மையமும் ஒதுக்கப்பட்டது.

Related Tags :
Next Story