அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 3 March 2019 3:15 AM IST (Updated: 3 March 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியலின் தற்கால ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற தலைப்பில் 2-நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தாவரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடேசலு தலைமை தாங்கினார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் பதிவாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

கருத்தரங்கை தமிழக அரசின் கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் சேகர்குமார் சூரஜ் தொடங்கி வைத்து பேசுகையில், இயற்கையை பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டு பேசி னார். தொடர்ந்து கருத்தரங்கம் பற்றிய மலர் வெளியிடப்பட்டது.

இதில் 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, தாவரவியலின் தற்கால ஆராய்ச்சியின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலகதட்ப வெப்ப நிலைமாற்றம் பற்றி கலந்துரையாடினர்.

கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில், கடல்சார் அறிவியல் புலத்தின் முன்னாள் முதல்வர் கதிரேசன் கலந்து கொண்டு, அலையாத்திகாடுகளின் முக்கியத்துவம், பேரிடர் மேலாண்மை குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில், கருத்தரங்க செயலாளர்கள் முல்லைநாதன், சோமசுந்தரம், தாவரவியல் துறையின் பேராசிரியர் வெங்கடேசலு உள்பட பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்க செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story