“லட்சியங்களை அடைய போராட வேண்டும்” பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் சாந்தா பேச்சு
லட்சியங்களை அடைய போராட வேண்டும் என்று குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு 389 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இதில் 301 இளங்கலை மாணவ-மாணவிகளுக்கும், 88 முதுகலை மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 389 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பல்கலைக்கழக அளவில் இளங்கலை வரலாறு பாடப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவி திவ்யபாரதியை கலெக்டர் சாந்தா பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கலெக்டர் சாந்தா பேசியதாவது:-
பட்டம் பெறும் பலபேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பீர்கள். பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து வந்து பயின்று பட்டம் பெறுகின்ற நீங்கள் அனைவரும் வறுமை முதலான பலபிடிகளிலிருந்து மீண்டு வந்துள்ளர்கள். உங்கள் பகுதியை, உங்கள் ஊரினை, இந்த சமுதாயத்தினை முன்னேற்றுவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் கல்வி பெரும் துணையாய் இருக்கும்.
பட்டம் பெற்ற அனைவரும் வேலை வேண்டும் என்று நாட்களை நகர்த்தாமல், நீங்களே வேலை தருபவர்களாக மாற வேண்டும். பட்டம் பெற்ற இந்த நாளிலிருந்தே அதற்கான முயற்சியில் நீங்கள் இறங்க வேண்டும். கல்வி என்பது அறியாமையை போக்கக் கூடியது. அறிவினை தேடிச் செல்லக்கூடியது. செல்கின்ற பாதை நேர்வழியாக இருக் கிறதா? என்று நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். லட்சியங்களை அடைய போராட வேண்டும். இயன்றவரை நீங்கள் கற்ற கல்வி பிறருக்குப் பயன்பட வேண்டும். ஆர்வமுள்ள துறைகளையும் பணிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணங்களைப் பண்படுத்த வேண்டும். அதற்கேற்ப செயல்களை ஒழுங்கு படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மனநிறைவு உங்களுக்கு ஏற்படும். ஏதோ படித்தோம் பட்டம் பெற்றோம் என்றில்லாமல் நம்மாலான சிறு நன்மையை பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்கும் ஆற்ற நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story