100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

150 பேர் தங்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் விவசாய நிலங்களில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சுமார் 100 பயனாளிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதனால் வெங்கலம் ஊராட்சியில் மீதமுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் நேற்று ஒன்றுதிரண்ட 150 பேர் தங்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி எழுத்தர் ரவியிடம் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பணி ஆணை பெற்றவுடன் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story