காரைக்கால்மேடு கடற்கரையில் கஞ்சா பொட்டலங்கள் கிடந்ததால் பரபரப்பு


காரைக்கால்மேடு கடற்கரையில் கஞ்சா பொட்டலங்கள் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால்மேடு கடற் கரையில் கஞ்சா பொட்டலங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு கடற்கரையோரத்தில் நேற்று காலை மர்ம பொட்டலங்கள் கிடந்தன. அங்கு வந்த மீனவர்கள் இந்த பொட்டலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மீனவ கிராம பஞ்சாயத்தாரிடமும், நகர காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து தலைமையில் போலீசாரும், மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் கடற்கரைக்கு விரைந்து வந்து மர்ம பொட்டலங்களை பார்வையிட்டனர். அப்போது போலீசார் கடற்கரையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களை கைப்பற்றி பிரிந்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் அந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தமிழக பகுதியில் இருந்து படகுகள் வழியாக வெளிநாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுகிறதா? அல்லது வெளி நாட்டில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story