அ.தி.மு.க. தலைமையில் வெற்றி கூட்டணி அமைந்துள்ளது தம்பிதுரை பேட்டி
அ.தி.மு.க. தலைமையில் வெற்றி கூட்டணி அமைந்துள்ளது என தம்பிதுரை கூறினார்.
கரூர்,
பிரதமர் நரேந்திரமோடி பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பது அரசியலாக்க கூடாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை காலத்தால் அழியாத திட்டங்கள் என்றும் அதை தற்போதைய அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். முன்பு தமிழக அ.தி.மு.க. அரசை தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து விமர்சித்து வந்ததால்தான் எனது எதிர்ப்பு கருத்தை பதிவு செய்தேன். இதைத்தான் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டரும் விரும்புவார்கள்.
தற்போது பிரதமர் மோடியே அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இதனை தமிழக பா.ஜ.க.வினர் உணர வேண்டும். தற்போது அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வரும் போதல்லாம் வைகோ கருப்புக் கொடி காட்டுகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ எப்போதும் கருப்பு துண்டு அணிபவர் தான் அதனால் நேற்றும் அவரது துண்டை உயர்த்தி காட்டி இருப்பார் என கிண்டலாக தம்பிதுரை பதில் அளித்தார்.

Related Tags :
Next Story