வருகிற 10-ந் தேதி நடக்கிறது: 1,200 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 24 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,200 மையங்கள் செயல்பட உள்ளன.
நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தியும் அதன் மூலமும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 118 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
எனவே அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாள் அன்று தவறாமல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லா நிலையை உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story