மாவட்ட செய்திகள்

மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில்தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் நகை பறிப்புநள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் கைவரிசை + "||" + Jewelry flush with 5 women sleeping Arbitrators in midnight

மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில்தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் நகை பறிப்புநள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் கைவரிசை

மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில்தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் நகை பறிப்புநள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் கைவரிசை
மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம், 

செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் துரிஞ்சாபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து உள்ள 5 வீடுகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ருக்கு(வயது 37), பிரியதர்ஷினி((19), சென்னம்மாள் (35), திவ்யபாரதி(19), பவித்ரா(27) ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மேல்செங்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரே நேரத்தில் 5 வீடுகளில் புகுந்து மர்மநபர்கள், தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் நகைகளை பறித்துச்சென்ற சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்லவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.