பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 3 March 2019 7:16 PM GMT)

சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி ரெயில் நிலையம் அருகில் ஜெயம்கொண்டநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மன்னார்குடி சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோவில், கீழராஜவீதி நீலகண்டேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், சொக்கநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், அண்ணாமலைநாதர் கோவில், திருப்பாற் கடல்-அரித்திராநதி தெப்பக்குளத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில், திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம் ஆகிய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Next Story