திருச்சியில் குரூப்-1 முதல்நிலை தேர்வை 7,628 பேர் எழுதினர்


திருச்சியில் குரூப்-1 முதல்நிலை தேர்வை 7,628 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 3 March 2019 9:18 PM GMT)

திருச்சியில் நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வை 7,628 பேர் எழுதினர்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிக்கான போட்டித் தேர்வு திருச்சி மாவட்டத்தில் நேற்று 38 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு திருச்சி மாவட்டத்தில் 10,302 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7,628 பேர் தேர்வு எழுதினர். 2,674 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்விற்கு 38 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

தேர்வை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 7 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் வீதம் 38 தேர்வுகூட கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு வீடியோகிராபர் வீதம் 38 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நடந்த போட்டி தேர்வை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story