காட்டுமன்னார்கோவில் அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி


காட்டுமன்னார்கோவில் அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 4 March 2019 3:58 AM IST (Updated: 4 March 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலியானார்.

காட்டுமன்னார்கோவில்,

அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 75), கூலித்தொழிலாளி. இவர் தனது மகள் மல்லிகாவின் வீடான காட்டுமன்னார்கோவில் அருகே தேவனாம் புத்தூருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல நேற்று காலை காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சின்னதம்பி காத்துக் கொண்டிருந்தார். அப்போது காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக சின்னதம்பி ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது.

இதனால் அவர், நிலைதடுமாறி பஸ்சின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சின்னதம்பி சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புன்சு மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சின்னதம்பி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மல்லிகா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story