ரூ.520 கோடியில் கட்டப்பட்ட சிந்துதுர்க் விமான நிலையம் முதல்-மந்திரி பட்னாவிஸ் நாளை திறந்து வைக்கிறார்


ரூ.520 கோடியில் கட்டப்பட்ட சிந்துதுர்க் விமான நிலையம் முதல்-மந்திரி பட்னாவிஸ் நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

ரூ.520 கோடி செலவில் கட்டப்பட்ட சிந்துதுர்க் உள்நாட்டு விமான நிலையத்தை முதல்-மந்திரி பட்னாவிஸ் நாளை திறந்து வைக்கிறார்.

மும்பை, 

மராட்டியத்தில் தற்போது 3 சர்வதேச விமான நிலையங்களும், 13 உள்ளூர் விமான நிலையங்களும் உள்ளன. இந்தநிலையில், கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க்கில் சுற்றுலா மேம்பாட்டை கருத்தில் கொண்டு ரூ.520 கோடி செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த விமான நிலையம் சிந்துதுர்க் கோட்டை மற்றும் தார்கர்லி கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பாருலே-சிபி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சிந்துதுர்க் விமான நிலைய பணிகள் முடிந்ததை அடுத்து, அதன் திறப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கின்றனர். இந்த புதிய உள்ளூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சிந்துதுர்க்கில் சுற்றுலா மேம்படும் என்று மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.

சிந்துதுர்க் விமான நிலையத்தில் இருந்து மராட்டியத்தின் பிற பகுதிகள் மற்றும் கோவா, கர்நாடகா ஆகிய இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது.

Next Story