நெல்லை மாவட்டத்தில், 11 புதிய தாசில்தார்கள் நியமனம் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்களை நியமித்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார்.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிற மாவட்டங்களில் இருந்து 11 தாசில்தார்கள் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களை தாலுகா வாரியாக பணி நியமனம் செய்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், ஆலங்குளம் தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் அம்பை தாசில்தாராகவும், திருச்செந்தூர் தில்லைப்பாண்டி சங்கரன்கோவில் தாசில்தாராகவும், சாத்தான்குளம் ஞானராஜ் பாளையங்கோட்டை தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் காளிராஜ், நெல்லை தாசில்தாராகவும், எட்டயபுரம் வதனாள் வீரகேரளம்புதூர் தாசில்தாராகவும், விளாத்திகுளம் ராஜ்குமார் தென்காசி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அணில்குமார் சிவகிரி தாசில்தாராகவும், தோவாளை சொக்கலிங்கம் நாங்குநேரி தாசில்தாராகவும், கல்குளம் ராஜாசிங் ராதாபுரம் தாசில்தாராகவும், விளவங்கோடு புரந்தரதாஸ் செங்கோட்டை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story