கோலியனூர் ஒன்றியத்தில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்


கோலியனூர் ஒன்றியத்தில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

கோலியனூர் ஒன்றியத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோலியனூர் தேரடி வீதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றிய செயலாளரும் ஆவின் தலைவருமான பேட்டை வி.முருகன் தலைமை தாங்கினார். ஏழுமலை எம்.பி., முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு வேட்டி- சேலை, தையல் எந்திரம், பால்கேன், சமையல் கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள் என 2 ஆயிரம் பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் சீத்தாகலியபெருமாள், பவானி தமிழ்மணி, பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமாமுருகன், இளைஞரணி செயலாளர் சேட்டு பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதிகள் ஜனார்த்தனன், முனுசாமி, நிர்வாகிகள் காசிநாதன், விஜயன், குமரவேல், ராமசாமி, பாக்யராஜ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோலியனூர், பனங்குப்பம், திருவாமாத்தூர், சோழகனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியை ஒன்றிய செயலாளர் பேட்டை வி.முருகன் தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.7,500-ம், 4-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதில் ஒன்றிய இளைஞரணி பொருளாளர் மோகன், ஊராட்சி செயலாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை, பாசறை இணை செயலாளர் சுதாகர், மாணவர் அணி துணைத்தலைவர் பிரபாகரன், கிளை செயலாளர்கள் செல்லப்பா, வீரப்பன், ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story