விலையில்லா அரிசி வழங்கி பசியில்லாத தமிழகத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா அமைச்சர் பேச்சு
விலையில்லா அரிசி வழங்கி பசியில்லாத தமிழகத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் பாலதண்டாயுதம், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, முன்னாள் நகரசபை தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விலையில்லா அரிசி வழங்கி பசியில்லா தமிழகத்தை உருவாக்கினார். அதேபோல் அறிவு பசிக்கு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். அவர் மறைந்தாலும் அவர் வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நலத்திட்டங்களை திறம்பட செயலாற்றி வருகின்றனர்.
பொங்கல் பரிசு ரூ.1000 பொதுமக்களுக்கு கிடைத்துவிட கூடாது என தி.மு.க. வழக்கு போட்டு தடுக்க பார்த்தது. ஆனாலும் 2 கோடியே 2 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கினோம். இப்போது தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய ரூ.2 ஆயிரம் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்து கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story