பள்ளியில் விளையாடிய போது சம்பவம் சுவர் இடிந்து விழுந்து 4-ம் வகுப்பு மாணவன் சாவு


பள்ளியில் விளையாடிய போது சம்பவம் சுவர் இடிந்து விழுந்து 4-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

டி.நரசிப்புரா அருகே பள்ளியில் விளையாடி கொண்டிருந்த ேபாது சுவர் இடிந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா இந்தவாளு கிராமத்தில் வசித்து வருபவர் லோகேஷ். இவரது மகன் சந்துரு (வயது 10). இவன் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சந்துரு பள்ளிக்கு சென்றான். மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியில் தனது நண்பர்களுடன் சந்துரு விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் பள்ளியின் சுவர் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சந்துரு சிக்கி பலத்த காயமடைந்தான். இதை பார்த்த ஆசிரியர்கள், ஊழியர்கள் ஓடி வந்து அவனை மீட்டு சிகிச்சைக்காக டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் டி.நரசிப்புரா போலீசார் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் விளையாடிய போது சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story