அதிகாரிகள் பணியிட மாறுதலை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அதிகாரிகள் பணியிட மாறுதலை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகத்தில் 984 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்டம், விட்டு மாவட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தேர்தல் பணியில் நேரடி தொடர்பு கிடையாது என்பதால் வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் பணியிட மாறுதலை கண்டித்தும், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலர்கள் வழக்கம் போல் வந்தனர். ஆனால் அவர்கள் பணி எதையும் மேற்கொள்ளாமல் தங்களது இருக்கையில் அமர்ந்து இருந்தனர். இதேபோல தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 724 பேரில் 538 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இன்றும்(செவ்வாய்க்கிழமை) உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது.

Related Tags :
Next Story