மாவட்ட செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11½ லட்சம் மோசடி3 பேர் கைது + "||" + Rs 11½ lakh fraud was awarded to Seed in Engineering College 3 people arrested

என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11½ லட்சம் மோசடி3 பேர் கைது

என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11½ லட்சம் மோசடி3 பேர் கைது
என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.11½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, 

மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி வில்லேபார்லேயில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விரும்பினார். இதை அறிந்த மாணவியின் நண்பர் ராஜேஸ் (வயது22), அவரது நண்பர்களான ரோகன் பரப்(23), ராகேஷ் குப்தா (25) ஆகியோர் தங்களுக்கு அந்த கல்லூரியில் தெரிந்த பேராசிரியர் இருப்பதாகவும், அவர் மூலம் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறினர்.

இதை நம்பிய மாணவியை அவரது தந்தையுடன் ராஜேஸ் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அப்போது, கல்லூரிக்கு வெளியே நின்ற ஒருவர் பேராசிரியர் என அறிமுகமானார்.

அப்போது, கல்லூரியில் ‘சீட்’ கிடைக்க அவர் கேட்ட ரூ.60 ஆயிரம் தொகையை மாணவி கொடுத்தார். இதற்காக அந்த பேராசிரியர் ஒரு ரசீதை கொடுத்தார். இதையடுத்து மாணவி கல்லூரியில் சேர அந்த ரசீதுடன் சென்றபோது, அது போலி என கூறி கல்லூரி நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மாணவியிடம் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதே பாணியில் பலரிடம் ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் வரை அவர்கள் மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

மேலும் கல்லூரி பேராசிரியர் போல் நடித்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது
பவானிசாகர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
3. போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது
சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.
4. ரூ.13 லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது
ரூ.13 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.
5. நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு நகைகள் நாளை முதல் உரியவர்களிடம் ஒப்படைப்பு போலீஸ் அதிகாரி தகவல்
நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் நாளை முதல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும், அடகு நகையை திரும்ப பெற மேலும் ஒரு வாரம் மனு கொடுக்கலாம் என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி தெரிவித்தார்.