விராலிமலை அருகே தம்பிதுரையை பொதுமக்கள் முற்றுகை
விராலிமலை அருகே குடிநீர் கேட்டு தம்பி துரையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விராலிமலை,
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி ராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, தேங்காய்திண்ணிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் நேற்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் குறைகளை கேட்பதற்காக செவல்பட்டி கிராமம் வழியாக தம்பிதுரை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தம்பிதுரையின் காரை வழிமறித்தனர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் பின்னால் காரில் வந்த கலெக்டர் உமா மகேஸ்வரி காரில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் கொள்கைகள் வேறு, கூட்டணி வேறு. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு உள்ளோம். கூட்டணி இல்லாமலும் போட்டியிட்டு உள்ளோம். தமிழர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக தற்போது இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து நான் பலமுறை குரல் கொடுத்து உள்ளேன்.
இதனால் பல்வேறு பணிகள் நடைபெற்றன. தற்போது கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார். எனவே கூட்டணி என்பது வேறு, மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது வேறு. நான் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து உள்ளேன். சீட்டு ஒதுக்குவது கட்சியின் தலைமைக்கு உட்பட்டது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் குழுவில் நான் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story