தியாகதுருகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


தியாகதுருகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 6 March 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55), மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர். இவரது மனைவி கொளஞ்சி. சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொளஞ்சி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் உடல்நலக்கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story