தாசில்தார்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு: பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தாசில்தார்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு வட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக குளித்தலை தாசில்தார், கோட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கடவூர் ஒன்றியத்தில் தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் பணியிட மாறுதலை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில் திட்ட மேலாளர் குமரவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சையத், இளநிலை பொறியாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பாக தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டார தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் (வட்டாரம்) ராஜேந்திரன், ராணி (கிராம வளர்ச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய மேலாளர்கள் திருஞானம், ருக்குமணி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story