கட்டாய திருமணத்துக்கு மறுத்ததால் உணவில் விஷம் கலந்து மகளை கொல்ல முயன்ற பெற்றோர் கைது
பாலக்கோடு அருகே, கட்டாய திருமணத்துக்கு மறுத்ததால் உணவில் விஷம் கலந்து மகளை கொல்ல முயன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் மினி வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள், அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் குமார் தனது மினி வேனை இயக்கி வரும் டிரைவரும், தனது மகளும் காதலிப்பதாக சந்தேகமடைந்தார். இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது மகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. தான் யாரையும் காதலிக்கவில்லை என மகள் எடுத்துக்கூறியும் அதை குமார் நம்பவில்லை.
மேலும் உறவினர் ஒருவரை கட்டாய திருமணம் செய்து கொள்ள மகளிடம் குமார் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மகள், நான் படிக்க வேண்டும், என கூறி திருமணத்திற்கு மறுத்ததால் குமாரும், தனலட்சுமியும் சேர்ந்து இரும்பு கம்பியால் கை மற்றும் முதுகு பகுதியில் சூடு வைத்து மகளை கொடுமைப்படுத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர்.
நேற்று காலை பள்ளிக்கு செல்லுமாறு மகளிடம் தாய் தனலட்சுமி கூறி மதிய உணவை டிபன் பாக்சில் வைத்து கொடுத்துள்ளார். இதை வாங்கிக்கொண்டு மகள் பள்ளிக்கு செல்ல புறப்பட்டார். அப்போது அவருடைய தங்கை வந்து, நீ கொண்டு போகும் மதிய உணவில் அம்மா குருணை விஷம் கலந்து இருப்பதாக கூறினாள். உடனே அதை திறந்து பார்த்தபோது விஷ மருந்து வாடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாரித்து கொண்ட மகள் உணவை மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். உணவில் விஷம் கலந்து தன்னை கொல்ல முயற்சி செய்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரை தேடி அவர்கள் ஊருக்கு சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் விசாரித்தபோது, 2 பேரும் வெளியூர் செல்ல திட்டமிட்டு ஜிட்டாண்டஅள்ளி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்று குமார், தனலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது கட்டாய திருமணத்திற்கு மறுத்ததால் அவர்கள் உணவில் விஷம் கலந்து மகளை கொல்ல முயன்றது தெரியவந்தது. கைதான 2 பேரையும், பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். மகளை சைல்டுலைன் அமைப்பினர் மீட்டு தர்மபுரி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story