பர்கூரில் பிளைவுட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு


பர்கூரில் பிளைவுட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-06T02:04:32+05:30)

பர்கூரில் பிளைவுட் ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பர்கூர்,

சென்னையில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களூருக்கு சென்றது. இந்த லாரி நேற்று பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த பிளைவுட்டுகள் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயம் அடைந்தார். ரோட்டில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து சென்று லாரி மற்றும் பிளைவுட்டுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. இந்த கார் பர்கூர் அருகே உள்ள சின்னமல்லப்பாடி கிராமத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இந்த 2 விபத்துக்கள் குறித்தும் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 விபத்துகளில் காயம் அடைந்த டிரைவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

Next Story