உடல்நலக்குறைவால் மரணம் முன்னாள் மத்திய மந்திரி தனஞ்ஜெய் குமார் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடந்தது


உடல்நலக்குறைவால் மரணம் முன்னாள் மத்திய மந்திரி தனஞ்ஜெய் குமார் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடந்தது
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 6 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி தனஞ்ஜெய் குமாரின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மங்களூரு, 

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி தனஞ்ஜெய் குமாரின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தனஞ்ஜெய் குமார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார்(வயது 67). முன்னாள் மத்திய மந்திரி ஆவார். பா.ஜனதா கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய போது, தனஞ்ஜெய் குமாரும் கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.

ஆனால் அதன்பின்னர் எடியூரப்பா மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார். ஆனால் தனஞ்ஜெய் குமார் பா.ஜனதாவில் சேராமல் காங்கிரசில் இணைந்தார்.

மரணம்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூரை சேர்ந்த தனஞ்ஜெய் குமார், மங்களூரு டவுன் கத்ரி கம்பளா பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் தனஞ்ஜெய் குமார் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்குறைவு காரணமாக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனஞ்ஜெய் குமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

உடல் தகனம்

இதனை தொடர்ந்து அவரது உடல் கத்ரி கம்பளா பகுதியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை கத்ரி கம்பளா பகுதியில் இருந்து தனஞ்ஜெய் குமாரின் உடல் அவரது சொந்த ஊரான வேனூருக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதில் மந்திரி யு.டி.காதர், மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத், முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story