பிரியாணி மாஸ்டர் கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
மதுரவாயலில் பிரியாணி மாஸ்டரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பூந்தமல்லி,
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., 5-வது பிளாக்கை சேர்ந்தவர் அப்துல் கரீம் (வயது 53). பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, அதே பகுதியில் நடந்து வந்த கந்தசாமி நகரை சேர்ந்த வினோத் (31) என்பவர் மீது அப்துல் கரீம் எதிர்பாராமல் மோதி விட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வினோத், சரமாரியாக தாக்கியதில் அப்துல் கரீம் கீழே விழுந்தார்.
உடனே வினோத் தரையில் இருந்த கல்லை எடுத்து அப்துல் கரீம் தலையில் போட்டார். இதில் அப்துல் கரீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து போன அப்துல் கரீம் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்த வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அம்பிகா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் வினோத் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

Related Tags :
Next Story