திருவொற்றியூரில் குடோனில் தீ விபத்து; ரூ.20 லட்சம் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசம்
திருவொற்றியூரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் சாத்தாங்காடு போலீஸ் நிலையம் பின்புறம் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் தேவ கணேஷ் (வயது 38) என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இவர், இங்கு பழைய வாஷிங் மெஷின், பிரிட்ஜ், பேன், கம்ப்யூட்டர், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட் களை பழைய விலைக்கு வாங்கி வந்து அவற்றை பிரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென்று அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உரிமையாளர் தேவகணேசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் மாதவரம், மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அதில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் குடோனின் உள்ளே சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருட்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குடோனுக்கு அருகே காலி இடத்தில் உள்ள புதர்களில் மர்ம நபர்கள் தீவைத்ததில் குடோனில் தீப்பிடித்து இருப்பது தெரியவந்தது.
மேலும் இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story