சட்டவிரோதமாக செயல்படும் 211 பள்ளிகள் மூடப்படும் மும்பை மாநகராட்சி அறிவிப்பு


சட்டவிரோதமாக செயல்படும் 211 பள்ளிகள் மூடப்படும் மும்பை மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 10:23 PM GMT)

மும்பையில் சட்ட விரோதமாக செயல்படும் 211 பள்ளிகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் சட்ட விரோதமாக செயல்படும் 211 பள்ளிகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

சட்டவிரோத பள்ளிகள்

மும்பையில் 211 தனியார் பள்ளிகள் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சட்டவிரோதமாக செயல்படும் முழுப்பட்டியலையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் தற்போது மொத்தம் 12 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவற்றில் 163 பள்ளிகள் ஆங்கில வழி பள்ளிகளாகும்.

இதனால் மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த பள்ளிகள் கோவண்டி, மான்கூர்டு, கோரேகாவ், மலாடு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

தலா ரூ.1 லட்சம் அபராதம்

இந்த 211 பள்ளிகளை இழுத்து மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. மாணவர் சேர்க்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பள்ளிகளுக்கு மாநகராட்சி தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது.

தற்போது அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story