அல்காடெல் டேப்லெட்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அல்காடெல் நிறுவனம் 3 டி 10 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஆடியோ ஸ்டேஷன் வசதியோடு பார்ப்பதற்கே வித்தியாசமான, அழகிய தோற்றத்தோடு இந்த டேப்லெட் வந்துள்ளது. அழகிய உருளை போன்ற தோற்றத்துடன் உள்ள இந்த ஆடியோ ஸ்டேஷனை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் எளிதில் கழற்றி மாட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்கு தளத்தையும், குவாட் கோர் பிராசஸரையும் கொண்டுள்ளது. இதில் 10 அங்குல திரை உல்ளது.
இது 16 ஜி.பி. உள்ளடு நினைவக வசதியும் 128 ஜி.பி. வரை விரிவாக்கும் வசதியும் (மைக்ரோ எஸ்டி கார்டு) கொண்டது. இதில் ஒற்றை சிம் (நானோ) வசதி உள்ளது. இதில் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
ஆக்ஸிலரோ மீட்டர், வை-பை 802.11, புளூடூத் 4.2, மைக்ரோ யு.எஸ்.பி. 2.0, ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் எடை 440 கிராம். இதில் 4,080 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் இது தொடர்ந்து 4.30 நேரம் செயல்படும்.
இதன் இணைப்பாக உள்ள ஆடியோ ஸ்டேஷனில் 2,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது 7 மணி நேரம் செயல்படும். இதிலும் புளூடூத் இணைப்பு, மைக்ரோ எஸ்.பி. போர்ட், எஸ்.டி. கார்டு ரீடர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சிறப்பான இசையை விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும். இதன் விலை சுமார் ரூ.18,400.
Related Tags :
Next Story