வானவில் : 3 டி ஓவியம் வரையும் கருவி


வானவில் : 3 டி ஓவியம் வரையும் கருவி
x
தினத்தந்தி 6 March 2019 3:51 PM IST (Updated: 6 March 2019 3:51 PM IST)
t-max-icont-min-icon

முப்பரிமாண ஓவியங்கள் வரைவது சற்று கடினமானது. அதற்காக செலவிடும் நேரமும் உழைப்பும் மிக அதிகம்.இதனை கற்றுக் கொள்வதும் அத்தனை சுலபமில்லை.

திரையில் பார்க்கும் எதையும் ஓவியமாக வரைகிறது இந்த ஈஹாவ் வாண்ட் என்னும் சிறிய குச்சி போன்ற கருவி. இதன் செயலியின் மூலம் நமக்கு வேண்டிய படங்களை தேர்வு செய்து இந்த கருவிக்கு அனுப்பி தேவையான அளவில் த்ரீ டி ஓவியங்களை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

இது மட்டுமின்றி நிஜ பொருட்களை நோக்கி இந்த கருவியை அசைப்பது போல செய்தால், அந்த பொருளை அப்படியே த்ரீ டி ஓவியமாக மாற்றி திரையில் காட்டும். குழந்தைகள் கூட எளிதாக உபயோகிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்லாரும் வாங்கக்கூடிய விலையிலும் இதை விற்பனை செய்ய போவதாக தெரிவிக்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். விரைவில் இந்த ஈஹாவ் வாண்ட் சந்தைக்கு வருகிறது.

Next Story