வானவில் : அலை போல சுற்ற வைக்கும் ஆர்பிட் சக்கரம்
விளையாட்டு பிரியர்களுக்கு நல்ல செய்தியாக வந்திருக்கிறது ஆர்பிட் வீல். கால்களில் கட்டி கொள்ளும் சக்கரம் போல இருக்கிறது இது.
ஸ்கேட் போர்டு மற்றும் ஸ்கேட்டிங் செய்ய பயன்படும் ஷூ ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இதன் டிசைன். இதனை அணிந்துகொண்டு வளைந்து நெளிந்து அலைபோல சுற்றி மகிழலாம். இந்த சக்கரத்தின் ஆரம் பெரிதாக இருப்பதால் பல விதமான தரைப்பரப்பிலும் இதில் சுற்றலாம்.
ஆரம்பத்தில் பழகுவதற்காக மேலே ஒரு பேண்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு ஓட்டத் தெரிந்த பின்னர் அதை கழற்றி விடலாம். நேராக மட்டுமின்றி பக்கவாட்டிலும் வளைந்து செல்ல உதவுகிறது இந்த சக்கர ஷூ. கீழே விழாமல் இருக்க நல்ல கிரிப்பும் ( Grip ) கிடைக்கும்.
அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரே அளவில் இருக்கிறது.கனமின்றி லேசாக இருப்பதால் இதை அணிந்திருப்பதே தெரியாது.செல்போனில் பொழுதைக் கழிக்கும் பிள்ளைகளுக்கு இதனை வாங்கி கொடுத்தால் அவர்கள் வெளியில் சுற்றி விளையாடி மகிழ்வர். இதன் விலை ரூ.5,325.
Related Tags :
Next Story