தஞ்சை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 292 மாணவ,மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர் 193 பேர் வரவில்லை
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதனை 27 ஆயிரத்து 292 மாணவ, மாணவிகள் எழுதினர். 193 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 27 ஆயிரத்து 485 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி நேற்று தமிழ் தேர்வு நடை பெற்றது.
ஆனால் 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 27 ஆயிரத்து 292 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 193 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
பிளஸ்-1 தேர்வையொட்டி தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். மேலும் தேர்வு மையங்களில் மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடை பெறுவதை கண்காணிக்கவும் 224 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று சோதனை மேற்கொண்டனர். இதே போல் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங் களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story