தஞ்சை பெரிய கோவிலுக்கு ராமராஜ்ய ரதம் வருகை ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தஞ்சை பெரிய கோவிலுக்கு ராமராஜ்ய ரதம் வருகை ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-07T01:01:29+05:30)

ராமராஜ்ய ரதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

ராமராஜியத்தை அமைக்க கோரியும், ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், ஸ்ரீ ராமதாச மிஷன் யுனிவர்சல் ஏற்பாட்டால் ராமராஜ்ய ரதம் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

இந்த ரதம் புதுக்கோட்டை வழியாக தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று மதியம் வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் சக்தி சாந்தானந்த மகரிஷி, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், விசுவ இந்து பரிஷத் ஒருங்கிணைப்பாளர் கருடானந்தசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ரதம் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி, புதுச்சேரி வழியாக வருகிற 9-ந்தேதி ஆந்திரா செல்கிறது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அரியானா வழியாக என மொத்தம் 9 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து வரும் ஏப்ரல் 13-ந்தேதி ராமநவமிக்கு அயோத்திக்கு செல்கிறது. அங்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 14-ந்தேதி ராமநவமியில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

இது குறித்து ஏற்பாட்டார்ளர்கள் கூறுகையில், “ராமராஜியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது தான் இந்த ரதத்தின் நோக்கம். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது”என்றார்.

Next Story