நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்புக் கூட்டம் பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்தது.

பெரம்பலூர்,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். வாக்களிக்க பணமோ, பொருளோ பெறக்கூடாது. இது தொடர்பாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்புக் கூட்டம் பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன், முன்னாள் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, ராமச்சந்திரன்உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணிவேல் நன்றி கூறினார். 

Next Story