பாளையம், சூரக்குழி கிராமங்களில் மயானக் கொள்ளை திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாளையம், சூரக்குழி கிராமங்களில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் சுவேத நதிக்கரையில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், மூலஸ்தான அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு 10 மணிக்கு கொடியேற்றம் மற்றும் குடி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாசி மாத அமாவாசையான நேற்று கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு காளி புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அருகில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி உருவத்திற்கு கீழ் அரிசி சாதம் கொட்டப்பட்டிருந்தது. அந்த சாதத்தில் கிடா வெட்டி ரத்தம் கலந்த சாதம் அள்ளி வீசப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண்கள் மடியேந்தி அந்த சாதத்தை பெற்றுக்கொண்டனர். அந்த சாதத்தை மடியில் வாங்கினால், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு, திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம். இதில், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்தினர். கோழிகளை பெற்று அதைக்கடித்து அதன் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சி குடித்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு குடல் பிடுங்கும் நிகழ்ச்சியும், சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.
இதேபோல அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலிலும் மயானக் கொள்ளை நடந்தது. இதையொட்டி அங்காளம்மன், பாவாடைராயன் சாமிகளுக்கு பன்னீர், சந்தனம் இளநீர், திரவியபொடி போன்ற 16 வகையான அபிஷேக பொருட்கள்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்்அங்காள பரமேஸ்வரியின் விசுவரூப வீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், காட்டேரி, ரத்தக்காட்டேரி போன்று வேடமிட்டு முக்கிய வீதி வழியாக சென்றனர். நேற்று மாலை சூரக்குழி அருகே உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Tags :
Next Story