காதல் திருமணத்திற்கு உதவியதாக மிரட்டல்: தீக்குளித்த தொழிலாளி சாவு
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடியின் திருமணத்துக்கு செந்தில்குமார் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
தொட்டியம்,
தொட்டியம் அருகே உள்ள எம்.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 41). விவசாய கூலித்தொழிலாளி. திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடியின் திருமணத்துக்கு செந்தில்குமார் உதவி செய்ததாக கூறப்படுகிறது. எதற்காக திருமணத்துக்கு நீ உதவி செய்தாய்?, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு சிலர் மிரட்டினர். இதனால், பயந்து போன செந்தில்குமார், மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செந்தில்குமாரின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story