விவசாயிகளின் வருமானத்தை பெருக்க இஸ்ரேல் விவசாய முறை அமல் குமாரசாமி பேச்சு
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க இஸ்ரேல் விவசாய முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க இஸ்ரேல் விவசாய முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
விவசாய கடன் தள்ளுபடி
கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் விவசாய நிபுணர் விருது வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது:-
கர்நாடகத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
ரூ.44 ஆயிரம் கோடி
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.940 கோடி மட்டுேம மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அண்டை மாநிலமான மராட்டியத்திற்கு ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்திற்கு ஒதுக்கிய நிதியில் இதுவரை ரூ.400 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளில் செய்யாத சாதனையை தான் 5 ஆண்டுகளில் செய்துவிட்டதாக மோடி சொல்கிறார். கர்நாடக பட்ஜெட்டில் விவசாயத்துறையின் மேம்பாட்டிற்கு ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரிக்க...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குவதாக மோடி அறிவித்தார். ஆனால் அந்த திட்டத்தில் இதுவரை ரூ.1 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டை ஆண்ட அரசுகள் என்ன செய்தது என்பது மக்களுக்கு தெரியும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இஸ்ரேல் மாதிரி விவசாய முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Related Tags :
Next Story