நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் மந்திரி யு.டி.காதர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் மந்திரி யு.டி.காதர் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

மங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

அதிக இடங்களில் வெற்றி

கர்நாடக நகர வளர்ச்சி மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறி வருகிறார். அவர் பகல் கனவு கண்டு வருகிறார்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணி அதிக இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும்.

உளவுத்துறை தோல்வி

புலவாமா தாக்குதல் குறித்து கோட்டா சீனிவாச பூஜாரி கூறிய கருத்து சரியல்ல. அவர் மீது நான் நல்ல மரியாதை வைத்து இருந்தேன். மேலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலால் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறி உள்ளார். இதுபற்றி அவரிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை.

துணை ராணுவ வீரர்கள் மரணத்தை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. பயங்கரவாதி நடத்திய தாக்குதலை முன்கூட்டியே தடுப்பதில் மத்திய உளவுத்துறை தோல்வி கண்டுவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story