பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் முதன்மை கல்வி அலுவலர் தகவல்


பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 3:59 PM GMT)

பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடக்கிறது என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

பெண்களின் உரிமையை நிலை நாட்டவும், பெண்களுக்கு சம உரிமை அளிக்கவும் ஆண், பெண் பாலின சமநிலையை உருவாக்கவும் பெண்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. வளர்ந்து வரும் இந்த காலத்தில் பெண்களுக்கு சமுதாயத்தில் உள்ள நிலை குறித்தும், அனைத்து பெண்களும் சமநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், ஆண்கள் பெண்கள் ஏற்றத்தாழ்வு நிலையை போக்கவும், பாலின வேற்றுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து பெண்களும் சமுதாயத்தில் சரிநிகர் சமம் என்ற உன்னத நோக்கத்தில் அவர்களை நாம் போற்ற வேண்டும். பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சிறந்து விளங்கவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களை ஆதரிக்க வேண்டும்.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி பெண்களை கவுரவிக்க வேண்டும்.

பெண்கள் முன்னுரிமைக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கி பெருமை செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் நலனை இன்னும் சிறப்புறச் செய்ய அனைத்து பள்ளிகளிலும் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தவும் வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story