செல்போன்-கைக்கெடிகாரம் திருடியதாக கூறி மின்கம்பத்தில் வாலிபரை கட்டி வைத்து தீ வைப்பு 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே செல்போன், கைக்கெடிகாரம் திருடியதாக கூறி மின்கம்பத்தில் வாலிபரை கட்டி வைத்து தீ வைத்ததாக தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செண்பகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் கண்ணன்(50). விவசாயி.
சம்பவத்தன்று கண்ணன் திருமணஞ்சேரி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயல் வரப்பில் செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை வைத்து விட்டு விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். பணியை முடித்து விட்டு வந்து பார்த்தபோது செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை காணவில்லை.
இந்த நிலையில் செல்போனையும், கைக்கெடிகாரத்தையும் மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கீழஅக்ரஹார தெருவை சேர்ந்த ராமு மகன் தணிகைவேல்(35) திருடி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, கண்ணன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 2 பேர் சேர்ந்து தணிகைவேலை தாக்கி உள்ளனர். மேலும் தணிகைவேலை மின்கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய காலின் அருகே வைக்கோலை போட்டு தீ வைத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த தணிகைவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தணிகைவேலின் தம்பி உமாபதி குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து கண்ணன், செண்பகச்சேரியை சேர்ந்த திருஞானம் மகன் சந்தோஷ் (26) ஆகிய 2 பேரை கைது செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மின்கம்பத்தில் வாலிபரை கட்டி வைத்து தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story